ADDED : அக் 04, 2022 04:14 PM

* எல்லா தானத்தைக் காட்டிலும் வேததானம் உயர்ந்தது. வேதம் சொல்லிக் கொடுப்பவர் பிரம்ம லோகத்தை அடைவார்.
* பெற்றோர், மனைவி, குழந்தைகளை காப்பாற்ற வேண்டி எவரிடமிருந்தும் தானம் பெறலாம். அது தவறில்லை.
* சில கர்மாக்களை தன்னால் செய்ய முடியாவிட்டால் மகன், புரோகிதன், சகோதரன், மனைவி, தந்தை, நண்பன் இவர்களைக் கொண்டு செய்யச் சொல்லலாம்.
* திதி, திவசம் முதலிய கர்மாக்களை சொல்லப்பட்ட காலத்தில் செய்வதுதான் சிறந்தது.
* ஒருவர் பிறந்த நட்சத்திரத்திலும், பிறந்த தமிழ் மாதத்திலும், பிறந்த கிழமையிலும் உபநயனம், திருமணம் செய்வதை தவிர்க்கவும்.
* எந்த வீட்டில் சாப்பாட்டிற்கு துணையாக ஊறுகாய் இருக்கிறதோ, அந்த வீட்டில் தரித்திரம் இருக்காது.
* கடவுளுக்கு நன்றி கூறி சாப்பிட்டால் தைரியமும், பலமும் ஏற்படும். நிந்தித்தால் இவ்விரண்டும் அழியும்.
* எச்சில்பட்ட உணவை யாருக்கும் கொடுக்கக்கூடாது.

