
செப். 30 புரட்டாசி 13: மதுரை தல்லாகுளம் வெங்கடேசப்பெருமாள் கஜேந்திர மோட்சம். கரூர் தான்தோன்றி கல்யாண வெங்கடேசப்பெருமாள் கருட வாகனம். நாட்டரசன் கோட்டை எம்பெருமான் புறப்பாடு. சங்கரன் கோவில் கோமதியம்பாள் தங்கப்பாவாடை தரிசனம்.
அக்.1 புரட்டாசி 14: ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலை சீனிவாசப்பெருமாள் கருடவாகனம். ஒப்பிலியப்பன் கோவில் சீனிவாசப்பெருமாள் வெள்ளிப்பல்லக்கு. அஹோபில மடம் 12 வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம்.
அக்.2 புரட்டாசி 15: சரஸ்வதி ஆவாஹனம். பெரும்புதுார் மணவாள மாமுனிகள் புறப்பாடு. சிருங்கேரி சாரதாம்பாள் ராஜேஸ்வரி அலங்காரம். அஹோபில மடம் 20 வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம்.
அக்.3 புரட்டாசி 16: திருப்பதி ஏழுமலையான் புறப்பாடு. குலசேகரப்பட்டணம் முத்தாலம்மன் சிறப்பு அலங்காரம். மதுரை மீனாட்சியம்மன் மஹிசாசுரமர்த்தினி கொலுக்காட்சி.
அக்.4 புரட்டாசி 17: சரஸ்வதி, ஆயுத பூஜை (நல்ல நேரம் 7:31 - 9:00 மணி) திருப்பதி ஏழுமலையப்பன் தேர். மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் வெண்ணெய்த்தாழி சேவை. ஏனாதி நாயனார் குருபூஜை.
அக்.5 புரட்டாசி 18: விஜயதசமி. குழந்தைகள் கல்வி கற்க ஏற்ற நாள். வேதாந்ததேசிகர் திருநட்சத்திரம். வள்ளலார் பிறந்தநாள். சகல கோயில்களிலும் சுவாமி அம்பு விடும் வைபவம். தல்லாகுளம், ஒப்பிலியப்பன் கோயில்,ஸ்ரீவில்லிபுத்துார் ஆகிய தலங்களில் தேர்.
அக்.6 புரட்டாசி 19: திருமோகூர் காளமேகப் பெருமாள் புறப்பாடு. ஸ்ரீரங்கம் நம்பெருமான் திருமஞ்சனம். திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. சுவாமிமலை முருகன்
வைரவேல் தரிசனம்.

