உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வெனிஸ் நகரில் திருமண நாளைக் கொண்டாடிய நயன்தாரா, விக்னேஷ் சிவன்

வெனிஸ் நகரில் திருமண நாளைக் கொண்டாடிய நயன்தாரா, விக்னேஷ் சிவன்

தமிழ் சினிமாவில் மற்ற ஜோடிகள், ரசிகர்கள் என பார்த்து பொறாமைப்படும் ஜோடியாக நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் ஜோடி இருக்கிறார்கள். அவர்கள் காதலர்களாக இருந்த போதே ஜோடி ஜோடியாக எண்ணற்ற புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி இருக்கிறார்கள்.

திருமணமாகி, இரட்டை ஆண் மகனுக்குப் பெற்றோர்கள் ஆன பின்பும் அவர்களது ஜோடிப் புகைப்படங்கள் குறையவில்லை. இப்போதெல்லாம் தங்களது மகன்களுடனும் நிறைய புகைப்படங்களை வெளியிடுவது மட்டுமே மாற்றமாக உள்ளது.

நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவருக்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஜூன் 9ம் தேதி 2022ல் திருமணம் நடைபெற்றது. அவர்களது திருமண ஆண்டு விழாவைத் தற்போது இத்தாலி நாட்டில் உள்ள வெனிஸ் நகரில் கொண்டாடி வருகிறார்கள்.

மகன்களுடன் விதவிதமான புகைப்படங்களைத் தற்போது நயன்தாரா பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் அவர்களுக்கு திருமண நாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !