/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தீபாவளி பண்டிகை குப்பையை சேகரிக்க 30 டிரிப் கூடுதல் வாகனம் இயக்க ஏற்பாடு

ADDED : அக் 20, 2025 11:00 PM
கோவை: கோவை நகர் பகுதியில் நாளொன்றுக்கு 1,000 முதல், 1,250 டன் வரை குப்பை சேகரமாகும். தரம் பிரித்து சேகரித்து கிடங்கிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
மக்கும் குப்பை உரம் தயாரிக்கவும்,மக்காத குப்பை மறுசுழற்சிக்கும் கொண்டு செல்லப்படுகிறது. பண்டிகை சமயங்களில் குப்பை உருவாவது அதிகரிக்கும். விநாயகர் சதுர்த்தி மற்றும் சரஸ்வதி பூஜை சமயங்களில், 500 டன் குப்பை கூடுதலாக அள்ளப்பட்டது.
தீபாவளி பண்டிகையை மக்கள் பட்டாசு வெடித்து, கோலாகலமாக கொண்டாடினர். வீதி முழுவதும் பட்டாசு குப்பை, ஜவுளி பர்ச்சேஸ் செய்த குப்பை, டன் கணக்கில் உருவாகியுள்ளது.
ஒவ்வொரு வீட்டில் இருந்தும் வெளியேற்றப்படும் குப்பையை போல், ஜவுளி நிறுவனங்கள், பேக்கரிகள் மற்றும் ஹோட்டல்களில் இருந்து குப்பை அதிக குவிந்துள்ளது.
இவற்றை சேகரிக்க இன்று கூடுதலாக, 30 டிரிப் வாகனங்கள் இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது; இக்குப்பை வெள்ளலுார் கிடங்கில் தனியாக சேகரிக்கப்பட்டு அழிக்கப்படும் என, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்தார்.