/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
துாய்மை பணியாளர்களுக்கு இன்று அரை நாள் விடுமுறை
/
துாய்மை பணியாளர்களுக்கு இன்று அரை நாள் விடுமுறை
ADDED : அக் 20, 2025 11:12 PM
கோவை: துாய்மை பணியாளர்களுக்கு, இன்று அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தீபாவளியை முன்னிட்டு, அரசு பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறையில் சென்றுள்ளனர். தமிழக அரசு, தீபாவளிக்கு அடுத்த நாளும் அரசு விடுமுறை என, அறிவித்துள்ளது.
ஆனால் துாய்மை பணியாளர்களுக்கு, தீபாவளிக்கு ஒருநாள் மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதனால் தீபாவளிக்கு மறுநாள் (இன்று) விடுமுறை வழங்க வேண்டும் என, ஏ.ஐ.டி.யு.சி., லேபர் யூனியன் சார்பில், கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று அரை நாள் மட்டும், துாய்மை பணியாளர்களுக்கு விடுமுறை எடுத்துக்கொள்ள அனுமதி வழக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை, துாய்மை பணியாளர் ஏ.ஐ.டி.யு.சி. லேபர் யூனியன் தலைவர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

