வலிகளை போக்கும் கெமோமில் டீ!

சாமந்தி பூ வகையைச் சேர்ந்த கெமோமில் ஒரு மருத்துவ குணம் கொண்ட பூவாகும். இதில் டீ செய்து குடிப்பதால் பல நன்மைகளை பெறலாம்.

பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து, கெமோமில் டீ பவுடர் சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டிக் கொள்ளவும். பின்னர் அத்துடன் சிறிது எலுமிச்சை சாறு, தேன் சேர்த்து குடிக்கலாம்.

இது உங்கள் நரம்புகளை லேசாக்கி, உங்களுக்கு நல்ல தூக்கம் வரச் செய்யும்.

ரத்த ஓட்டத்தை சீராக்கி தேவையற்ற பதற்றத்தை தணிக்க உதவும்.

இதிலுள்ள கிளைசின் எனப்படும் வேதிப்பொருள் தசைப்பிடிப்பை போக்கி நிவாரணம் வழங்கும்.

சோர்வு, அலர்ஜி, வீக்கம் போன்றவற்றை தடுக்க உதவும்.

மாதவிடாய் வலியிலிருந்து விடுபட கெமோமில் டீ உங்களுக்கு உதவும்.

கெமோமில் டீ உயர் ரத்த அழுத்த அளவை மட்டுமல்லாமல், மாரடைப்பு அபாயத்தை குறைக்கவும் உதவும்.