பெண்களின் வரப்பிரசாதம் தண்ணீர்விட்டான் மூலிகை!
சமஸ்கிருதத்தில் 'ஷதாவரி' என்று சொல்லப்படும் தண்ணீர் விட்டான் மூலிகை, பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை பிரச்னைகள், மாதவிடாய் கோளாறுகள் வராமல் தடுக்கும்.
ஒழுங்கற்ற மாதவிடாய் கோளாறுகளை சரி செய்து சீராக வைக்கும்.
உடல் வலி, சோர்வைப் போக்கும். 'மேனோபாஸ்' எனப்படும் மாதவிடாய் நிற்கும் சமயத்தில் ஏற்படும் பதட்டம், பயம், மன அழுத்தம் போன்றவற்றை தடுக்கும்.
முறையற்ற உணவுப் பழக்கத்தால் வரும் பிசிஓடி என்ற கருக்குழாயில் ஏற்படும் கட்டிகளை வராமல் தடுக்கும்.
ஹார்மோன் செயல்பாடுகளின் சீரற்ற தன்மையை சரி செய்யும். பெண்களின் கருத்தரிப்பு தன்மையை அதிகப்படுத்தும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.
ஷதாவரி பொடி அல்லது சூரணம் நாட்டு மருந்து, ஆயுர்வேத மருந்தகங்களில் கிடைக்கும்.
குழந்தை பெற்ற பெண்கள், இதை சூடான பாலில் அரை டீ ஸ்பூன் கலந்து தினமும் குடிக்கலாம். தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும்.
குழந்தை பேறுக்காக சிகிச்சை எடுக்கும் ஆண்களும் இதை குடிக்கலாம்.
மேலும் இதில் சூப், கூட்டு, பொரியல் செய்து வாரம் ஒரு முறை சாப்பிடலாம்.