நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் இளநீர் குடிக்கலாமா?

04-மார்-2025

வெயில் கொளுத்த துவங்கினாலே உடலில் நீரேற்றத்தை தக்க வைக்க முதலில் தேடுவது இளநீரை தான்.

04-மார்-2025

இதில் கார்போஹைட்ரேட், சோடியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி உட்பட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

04-மார்-2025

தினமும் காலையில் இளநீரை குடிப்பது ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் என்பது டாக்டர்களின் கருத்தாக உள்ளது.

04-மார்-2025

அதேவேளையில், நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் இளநீர் குடிக்கலாமா? இதனால் பாதிப்பு ஏற்படுமா? என பலருக்கு பலத்த சந்தேகம் நிலவுகிறது.

04-மார்-2025

நார்ச்சத்து மற்றும் புரதத்தின் சிறந்த ஆதாரமாக இளநீர் உள்ளது. இதில் மெதுவாக ஜீரணமாகும் தன்மையுள்ளதால், ரத்த சர்க்கரை அளவை மெதுவாக அதிகரிக்கிறது.

04-மார்-2025

எனவே நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் தாராளமாக இளநீர் சாப்பிடலாம். ஆனால், ஒரு நாளைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட இளநீரைக் குடிக்கக்கூடாது.

04-மார்-2025

மிதமான அளவில் இளநீர் குடிப்பது உடலில் நீரேற்றம் மற்றும் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும்.

04-மார்-2025

எனவே, தினமும் ஒரு கிளாஸ் அளவுக்கு மட்டுமே இளநீரை குடிக்க வேண்டும். இல்லாவிட்டால் ரத்த சர்க்கரை அளவில் மாறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

04-மார்-2025

இதில், கலோரிகள் குறைவாக இருப்பதால் உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

04-மார்-2025