இதயத்தில் 'ஸ்டென்ட்' பொருத்தியிருப்பதை நம்மால் உணர முடியுமா?
ஒருவரின் இதயத்தில் 'ஸ்டென்ட்' பொருத்தியிருந்தாலும் அதை அவரால் உணர முடியாது.
'ஸ்டென்ட்' கரைந்து விடாமல் தமனியுடன் ஐக்கியமாகிவிடும் என்பதால் நகராது.
ஒரு சிலருக்கே கரையும் 'ஸ்டென்ட்' பொருத்தப்படுகிறது.
இதை பொருத்திய பின் முன்னெச்சரிக்கை தேவையில்லை என்றாலும் டாக்டர் பரிந்துரைத்த மாத்திரைகளைத் தவறாமல் உட்கொள்ள வேண்டும்.
ரத்தம் கெட்டியாகாமல் இருக்கத் தட்டணுக்களின் செயல்பாடுகளைக் குறைக்கும் மருந்துகளை மறக்கும் பட்சத்தில் 'ஸ்டென்ட்'டின் உள்ளேயே ரத்தக்கட்டி உருவாகி உயிருக்கு ஆபத்தாகும்.
ரத்தக்குழாயை நன்றாக விரிவடையச் செய்வதே 'ஸ்டென்ட்' பணியாகும்; வேறு பிரச்னை இல்லை.
அதில் மறுபடியும் அடைப்பு வருவதும், வராததும் ஒவ்வொருவரின் உடம்பிலுள்ள பிற பிரச்னைகளை கட்டுப்படுத்துவதைப் பொறுத்தே அமையும்.