இதய பாதுகாப்பு... உங்க கிச்சனிலேயே இருக்கு !
உலகளவில் அதிக இறப்புகளை ஏற்படுத்துவது, இதய நோய்களாக உள்ளது. முக்கிய காரணம், உணவு, உறக்கம், உடற்பயிற்சியின்மை மற்றும் தவறான பழக்க வழக்கங்கள்.
எனவே, ஐந்து வயது முதலே குழந்தைகளுக்கு ஆரோக்கியம் சார்ந்த கல்வியை பயிற்றுவிக்க வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட உணவு, உடலுக்கு ஆகாது என்று தெரிந்தும் பிள்ளை ஏங்கும்; அழுகிறான் என வாங்கித்தருவது சரியான வளர்ப்பு இல்லை.
இந்தியாவில் ஆண்டுக்கு, 30 லட்சம் பேர் இருதய நோய் பாதிப்பால் உயிரிழக்கின்றனர். தொற்றா நோய்களால் ஏற்படும் மொத்த உயிரிழப்புகளில், 60 % இதுதான்.
எனவே, சமைக்கும் போது உப்பை குறைக்க வேண்டும், எண்ணெய், சர்க்கரையை திட்டமிட்டு பயன்படுத்த வேண்டும்.
எண்ணெய் அதிகமானால், ருசி அதிகமாகும்; பிள்ளை அதிகம் சாப்பிடும் என நினைக்கும் தாய்மார்கள், மாறவேண்டிய நேரம் இது.
சர்க்கரை, ரத்த அழுத்தம், கொழுப்பு பரிசோதனை 20 வயது முதலே ஆண்டுக்கு ஒரு முறை செய்து கொள்ளலாம்.
தவிர, 'கால்சியம் ஸ்கோரிங்' பரிசோதனை செய்து கொண்டால், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இதய பாதிப்பு வர வாய்ப்பு உள்ளதா என்பதை, முன்கூட்டியே அறிய முடியும்.
போட்டி மனப்பான்மை, பொறாமை, மனஅழுத்தம் தவிர்த்து, உணவு, உறக்கம், உடற்பயிற்சி சரியாக இருக்க வேண்டும் என்பது டாக்டர்களின் அட்வைஸாகும்.