இன்று உலக புகை பிடிக்காத தினம்

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் இரண்டாம் வார புதன்கிழமை உலக புகை பிடிக்காத தினம் (No Smoking Day) அனுசரிக்கப்படுகிறது.

புகையிலையால் புகைப்பிடிப்பவர்களுக்கு தான் கெடுதல் என்றில்லை.

புகைக்காமல் புகைத்தல் (பாஸிவ் ஸ்மோக்கிங்) என்றொரு விஷயத்தை பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் குறைவாக உள்ளது.

அதாவது ஒருவர் புகைக்கும்போது மூன்றில் இரண்டு பங்கு புகை காற்றில் கலக்கிறது. இதனை சுவாசிப்பவர்களுக்கு ஏற்படும் விளைவுகள் தான் புகைக்காமல் புகைப்பது.

அதே போல் புகைபிடிக்கும் போது பிடிப்பவரை சுற்றி உள்ள துணிகள், படுக்கை, தலையணை என பல பொருட்கள் மீது இந்த ரசாயனங்கள் படிந்துவிடுகின்றன.

இதனை சுவாசிப்பவர்களுக்கு புகை பிடிப்பவர்களுக்கு ஏற்படும் அத்தனை பாதிப்புகளும் ஏற்படும். இதில் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகள் என்பது வருத்தம் அளிக்கும் ஒன்று.

சிகரெட், சுருட்டு அல்லது பீடி போன்ற புகையிலை பொருட்களின் ஆபத்துகள் அல்லது தீங்கு விளைவிக்கும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் அர்பணிக்கப்படுகிறது.