வெர்டிகோ எதனால் வருகிறது?
காய்ச்சல், வயிற்று வலி, தலைவலி போன்று வெர்டிகோ தலைசுற்றல் என்பதும் ஒரு அறிகுறி. எதனால் வெர்டிகோ வருகிறது என்பதை கண்டுபிடித்தால் தான் சிகிச்சை செய்ய முடியும்.
இயல்பாக 'பேலன்ஸ்' - நிலை தடுமாறாமல் எப்படி இருக்கிறோம் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
உள்காதில் இருக்கும் 'வெஸ்டிபுளார் அபாரடிஸ்' என்ற பகுதி, நாம் எந்தப் பக்கம் திரும்புகிறோம், குனிகிறோமா, நேராக அமர்ந்திருக்கிறோமா போன்ற தகவல்களை மூளைக்கு சொல்கிறது.
அடுத்தது கால், கை நரம்புகளில் இருந்து எந்த நிலையில் இருக்கிறோம் என்ற தகவல் மூளைக்கு தெரியும்.
அடுத்ததாக என்ன அசைவு உடலில் நடக்கப் போகிறது என்பதை முன்கூட்டியே அறிந்து அதற்கேற்ப மூளை அனுசரித்துக் கொள்ளும்.
நம் உடல் சமிஞ்சைகள் எல்லாம் மூளைக்கு வரும் போது அதற்கு தகுந்தாற் போல இயக்கங்கள் சரியாக இருக்கிறதா என்பதை சிறு மூளை கண்காணிக்கும்.
பெரு மூளையில் இந்த தகவல்கள் அனைத்தும் சென்று சேரும். இந்த இயக்கத்தில் எந்த இடத்தில் பிரச்னை என்றாலும் வெர்டிகோ வரலாம். டாக்டரை அணுகி அதற்கான சிகிச்சை பெற வேண்டும்.