தாய்ப்பால் வழங்குவதை எப்போது நிறுத்தலாம்? டாக்டர்கள் சொல்வது என்ன?
குழந்தைக்கு 2 வயது வரை தாய்ப்பால் கொடுக்கலாம் என டாக்டர்கள் கூறுகின்றனர்.
2 வயது வரை குழந்தை தாய்ப்பால் பருகுவதால் மூளை வளர்ச்சியில் 80 சதவீதம் பூர்த்தி ஆவதாகவும் கூறப்படுகிறது.
மனித உடலுறுப்புகளின் பரிணாம வளர்ச்சிக்கான அடிப்படை ஆதாரம் இவை.
அதனால்தான் இந்திய குழந்தைகள் மருத்துவ கழகம், பச்சிளங்குழந்தைகள் சிகிச்சை பிரிவு மருத்துவர்கள் 2 வயது வரை தாய்ப்பால் வழங்க அறிவுறுத்துகின்றனர்.
மீதியுள்ள 20 சதவீத மூளை வளர்ச்சியை ஊட்டச்சத்து உணவு முறைகளால் குழந்தை தாமாகவே பெற்றுவிடும்.
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும்போதே பிற இணை உணவு வழங்கும் போது தாய்ப்பால் பருகும் அளவு படிப்படியாக குறையும்.
மேலும் 2 ஆண்டுகள் முடிந்த 2 மாதங்களில் படிப்படியாக பால் சுரக்கும் அளவு குறையும். அப்போதுதான் நிறுத்த வேண்டும் என கூறப்படுகிறது.