ஆனித் திருமஞ்சனம் காணும் நடராஜர் ஆனந்த நடனம் ஆடுவது ஏன்?

11-ஜூலை-2024

சிவனின் நடனத்தைக் காண வியாக்ரபாதர், பதஞ்சலி முனிவர்கள் சிதம்பரத்தில் தவம் செய்து வந்தனர்.

11-ஜூலை-2024

அவர்களுக்கு நடன தரிசனம் அருள சிவன் இசைந்தார்.

11-ஜூலை-2024

இதனை அறிந்த இந்திராதி தேவர்கள், பிரம்மா, விஷ்ணு, லட்சுமி, சரஸ்வதி என அனைவரும் கூடினர்.

11-ஜூலை-2024

அங்கே பேரொளி ஒன்று தோன்றி நந்தீகேஸ்வரர் தன் பொற்பிரம்புடன் வந்தருளினார்.

11-ஜூலை-2024

கருணையே வடிவான சிவன் நடராஜராகவும், தாய் பார்வதி சிவகாமசுந்தரியாகவும் காட்சியளித்தனர்

11-ஜூலை-2024

சிவசிவ என்று கோஷமெழுப்பி அனைவரும் கரம்குவித்து நின்றனர்.

11-ஜூலை-2024

நடராஜர் புலித்தோல் உடுத்தி, உடுக்கை, அனல், மான், மழு, நாகாபரணம் அணிந்து நின்றார்.

11-ஜூலை-2024

டமருகத்தை அடித்தும், அக்னி ஏந்தியும், ஒருகையால் அபயம் அளித்தும், மறுகையால் பாதத்தைக் காட்டியும் நடனமாடினார்.

11-ஜூலை-2024

அவரின் சிவந்த சடைகள் எட்டுத்திக்கும் அசைந்தாடின.

11-ஜூலை-2024

இந்த நடன தரிசனத்தை இன்றும் நமக்கு சிதம்பரத்தில் வழங்கிக் கொண்டிருக்கிறார்.

11-ஜூலை-2024