ஆடிக்கிருத்திகை முருகனுக்கு உரியதாகச் சொல்லப்படுவது ஏன்?

29-ஜூலை-2024

ஆடிமாதம் அம்மனுக்குத்தான் உரியது என்றாலும் ஆடிக் கிருத்திகை தினம் முருகனுக்கு உரியதாகச் சொல்லப்படுகிறது.

29-ஜூலை-2024

முருகனின் கரத்தில் இருக்கும் வேல், சக்தி ஆயுதம் எனப்படும். அம்பிகையின் அம்சமே வேல் எனவும் சொல்வர்.

29-ஜூலை-2024

சக்திதரனாகிய முருகனுக்கும் ஆடியில் ஒருநாள் சிறப்பானதாகிவிட்டது.

29-ஜூலை-2024

கந்தனைக் கார்த்திகைப் பெண்கள் வளர்த்ததால், கிருத்திகை தினமே கார்த்திகேயனுக்கு உரியதாகி விட்டது.

29-ஜூலை-2024

ஆடிக்கிருத்திகை நாளில் முருக பக்தர்கள் காவடிகள் எடுத்தும், அலகு குத்தியும், பாலபிஷேகம் முதலியன செய்தும் ஆறுமுகனை ஆராதிப்பார்கள்.

29-ஜூலை-2024

முருகனின் வரலாற்றை கூறும் கந்தபுராணத்தை படிப்போருக்கு வாழ்வில் எல்லா நன்மைகளும் உண்டாகும்.

29-ஜூலை-2024

ஆடிக் கிருத்திகை வழிபாட்டால், தீயன யாவும் ஓடிப்போகும்; நல்லன எல்லாம் தேடி வரும் என்பது ஐதிகம்.

29-ஜூலை-2024