சர்வதேச விருதினை வென்ற ‛பூங்' படக்குழுவை பாராட்டிய பிரதமர் மோடி
ADDED : 139 days ago
மணிப்பூர் மாநிலத்தில் நிலவிய பதட்டத்தை மையப்படுத்தி உருவான படம் பூங். அங்கு நடந்த போராட்டத்தில் பிரிந்து சென்ற குடும்பத்தை ஒன்று சேர்க்கும் ஒரு சிறுவனை மையப்படுத்திய கதையில் இந்த படம் உருவாகியுள்ளது. லஷ்மி பிரியா தேவி என்பவர் இயக்கியுள்ள இப்படம், பிரிட்டன் சர்வதேச பாப்டா திரைப்பட விருது விழாவில் சிறந்த குழந்தைகள் படத்திற்கான விருதினை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த பூங் படத்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார் . அவர் வெளியிட்டுள்ள பதிவில், மணிப்பூர் மக்களுக்கும் பட குழுவினருக்கும் வாழ்த்துக்கள். இந்த படம் நாட்டின் அபாரமான படைப்பாற்றலை உலகிற்கு உணர்த்து வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்று பதிவிட்டுள்ளார்.