வாசகர்கள் கருத்துகள் (1)
ஹஹ்ஹா எங்களுக்கு மத்திய செய்தி துறை இணை (துணை) அமைச்சர் ஒருத்தர் இருக்கார். அவர் என்ன பண்றர்னான்னு யாருக்கும் தெரியாது அவர் உள்பட அவருக்கு பிடித்த ஸ்னாக்ஸ் மிக்ஸ்ர்.
கன்னடத்தில் இயக்குனர் பிரேம் இயக்கத்தில் துருவ சார்ஜா கதாநாயகனாக நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கே டி ; தி டெவில்'. இந்த படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அது மட்டுமல்ல, பாலிவுட்டின் கவர்ச்சி நடிகை நோரா பதேகி இந்த படத்தில் இணைந்து 'சற்கே சுனார்' என்கிற ஐட்டம் பாடலுக்கு ஆடியுள்ளார். ஆனல் இந்த படத்தின் இந்தி பதிப்புக்காக எழுதப்பட்டுள்ள இந்தப் பாடலில் ஆபாச வரிகள் இடம்பெற்றுள்ளதாக கூறி மிகப்பெரிய குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இப்படிப்பட்ட பாடலுக்கு சென்சார் எப்படி அனுமதி அளித்தது என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது. இந்த நிலையில் மத்திய செய்தி ஒளிபரப்பு துறை அமைச்சகம் சர்ச்சைக்கு ஆளான இந்த பாடல் வரிகளை சென்சார் போர்டு கவனமாக பரிசீலிக்கும்படியும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்மை என்றால் அந்த பாடலை எல்லா தளங்களிலிருந்தும் உடனடியாக நீக்கும்படியும் உத்தரவிட்டுள்ளது.
ஹஹ்ஹா எங்களுக்கு மத்திய செய்தி துறை இணை (துணை) அமைச்சர் ஒருத்தர் இருக்கார். அவர் என்ன பண்றர்னான்னு யாருக்கும் தெரியாது அவர் உள்பட அவருக்கு பிடித்த ஸ்னாக்ஸ் மிக்ஸ்ர்.