'கர' படத்திற்காக தனுஷ் பாடியுள்ள 'கண்ணம்மா என் கண்ணம்மா' பாடல் வெளியானது!
ADDED : 2 hours ago
விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் 'கர'. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடிக்க, சுராஜ் வெஞ்சரமூடு, ஜெயராம் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்த படத்தின் 'வாயா என் கர சாமி' என்ற பாடல் ஏற்கனவே வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில், இன்று கர படத்தின் இரண்டாவது சிங்கிளாக 'கண்ணம்மா என் கண்ணம்மா' என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த காதல் பாடலுக்கு தனுஷ் பின்னணி பாடியுள்ளார். ஐசரி கணேசனின் வேல்ஸ் பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படம் வருகிற 30ம் தேதி திரைக்கு வருகிறது.