உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அட்லியின் 'ராக்கா' படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் ஷாருக்கான்!

அட்லியின் 'ராக்கா' படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் ஷாருக்கான்!


ஹிந்தியில் ஷாருக்கான் நடிப்பில் 'ஜவான்' படத்தை இயக்கிய அட்லி, அதையடுத்து தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் 'ராக்கா' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் சமீபத்தில் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளின் போது வெளியிட்டார்கள். சாய் அபயங்கர் இசையமைக்கும் இந்த படத்தில் அல்லு அர்ஜுனுடன், தீபிகா படுகோனே, அனுஷ்கா ஷர்மா, மிருணாள் தாக்கூர், ஜான்வி கபூர் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இந்த நிலையில் தற்போது இந்த ராக்கா படத்தில் ஷாருக்கான் கெஸ்ட் ரோலில் நடிப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. சிறிய வேடமாக இருந்தாலும் ஷாருக்கான் என்ட்ரி கொடுக்கும் காட்சியை பிரமாண்டமாக படமாக்க திட்டமிட்டுள்ளாராம் அட்லி. மேலும், ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க இருந்த ஷாருக்கான், 'கிங்' படத்தின் கெட்டப்பை மாற்ற முடியாது என்பதற்காக கடைசி நேரத்தில் அப்படத்தில் இருந்து விலகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !