உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் இணையும் 'ஜெய் பீம்' கூட்டணி!

மீண்டும் இணையும் 'ஜெய் பீம்' கூட்டணி!


தமிழில் 'ஜெய் பீம், வேட்டையன்' ஆகிய படங்களை இயக்கியவர் தா.சே. ஞானவேல். இதையடுத்து 'தோசா கிங்' படத்தை ஞானவேல் இயக்குவதாக இருந்தது. ஆனால், அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை. இந்த நிலையில் நடிகர் சூர்யா, தா.சே. ஞானவேலிடம் இருவரும் இணைந்து மீண்டும் ஒரு படம் பண்ணலாம் என விருப்பம் தெரிவித்துள்ளாராம். இந்த படத்தை சூர்யா புதிதாக துவங்கியுள்ள ழகரம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளனர். ஆனால், சூர்யாவின் அடுத்த பட வரிசைகளில் ஞானவேல் படம் எந்த படமாக உருவாகும் என்பது குறித்து உறுதியான தகவல் இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !