உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: முதல் காமெடி ஆடியோ ரிக்கார்ட் எது தெரியுமா?

பிளாஷ்பேக்: முதல் காமெடி ஆடியோ ரிக்கார்ட் எது தெரியுமா?


அந்த காலத்தில் மக்கள் சினிமாவை ரசிக்க வேண்டும் என்றால் தியேட்டருக்குத்தான் சென்றாக வேண்டும். மற்ற நேரங்களில் பார்த்த சினிமாவிற்கும், அவர்களுக்கும் தொடர்பு இருக்காது. ரேடியோவில், ரிக்கார்டுகளில் பாடல்களை கேட்கலாம். அதன்பிறகு 'ஒலிச்சித்திரம்' என்ற பெயரில் படத்தின் ஆடியோ ஆல்பங்கள் வந்தது. 'திருவிளையாடல், வீரபாண்டிய கட்டபொம்மன், சரஸ்வதி சபதம், பட்டிக்காடா பட்டணமா' படங்களில் ஆடியோ ஆல்பங்கள் பெரிய வெற்றி பெற்றது.

ஆனால் படத்தில் இடம்பெற்ற நகைச்சுவை காட்சிகளுக்கென்று தனி ஆடியோ ரிக்கார்ட் வந்தது 'கல்யாண பரிசு' படத்திற்குத்தான். இந்த படத்தில் போலி எழுத்தாளர் பைரவனாக தங்கவேலு நடித்திருந்தார். அவர் மனைவி சரோஜாவிடம் பல பொய்களை சொல்லி மாட்டிக் கொள்வதும், அதை சமாளிக்க புதிதாய் ஒரு பொய் சொல்வதுமாய் சிரிக்க வைத்த காட்சிகள் நிறைய இருந்தது.

“எழுத்தாளர்கள் இந்த நாட்டின் முதுகெலும்பு என்று சொன்னேன். 'தட்றான் பாரு!” என்று தங்கவேலு கூற, “உங்களையா?” என்று சரோஜா கேட்பார்.

“என்னை ஏன் தட்றான்? கையை தட்னான், தட்னான்...தட்டிகிட்டே இருந்தான்!” என்று தங்கவேலு தொடந்து டூப் விடும் காட்சிகளை ரிக்கார்டுகளில் கேட்டு மக்கள் சிரித்து மகிழ்ந்தார்கள். நடைமுறை வழக்கில் 'மன்னார் அண்ட் கம்பெனி' என்றாலே ஏமாற்று வேலை என்று அர்த்தம் பெற்றுவிட்டது.

இப்போதும் யு டியூப்பில் இந்த படத்தின் காமெடி காட்சிகள் டிரண்டிங்கில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !