விக்ரம் பிரபுவின் புதிய படத்தை புதுமுகம் இயக்குகிறார்
ADDED : 13 hours ago
'சிறை' படத்தின் வெற்றிக்குப் பிறகு, கதை தேர்வில் கவனமாக இருக்கிறார் விக்ரம் பிரபு. குறிப்பாக அடுத்த சில வருடங்களுக்கு போலீஸ் கேரக்டரில் நடிப்பதில்லை என்று முடிவு செய்திருக்கிறார். அப்படி வந்த பல கதைகளை நிராகரித்திருக்கிறார். சில கதைகளை அவர் ஒப்புக் கொண்டிருந்தாலும், அவற்றை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. அவற்றில் சில சந்தேகங்கள் இருப்பதால் அதை நிவர்த்தி செய்த பிறகே அறிவிப்பார் என்று தெரிகிறது.
இந்த நிலைடியில் அவர் சித்தார்த் புதுமுகத்தின் படத்தில் நடிக்கவிருப்பதை உறுதி செய்திருக்கிறார். ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் விக்ரம் பிரபு உடன் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடந்து வருகிறது. ஒரே கட்ட மாக படப்பிடிப்பை முடிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.