விஜய்யின் அரசியல் பற்றிய கேள்விக்கு மம்முட்டி சொன்ன பதில்
நடிகர் விஜய் அரசியலில் இறங்கி தனிக்கட்சி துவங்கி சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலிலும் போட்டியிட்டார். அதுமட்டுமல்ல தான் ஏற்கனவே நடித்து வந்த ஜனநாயகன் திரைப்படம் தான் தனது கடைசி படமாக இருக்கும் என்றும் அறிவித்துவிட்டார். அதேசமயம் ஜனநாயகன் திரைப்படம் சென்சார் சிக்கல் காரணமாக இப்போது வரை சான்றிதழ் அளிக்கப்படாமல் சிக்கல் நீடித்து வருகிறது. அது மட்டுமல்ல விஜய்யின் அரசியல் பிரவேசம் காரணமாக முன்னணி நடிகர்கள் கூட விஜய் பற்றியோ அல்லது ஜனநாயகன் பிரச்சனை பற்றியோ செய்தியாளர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லாமல் நகர்ந்து விடுகிறார்கள்.
சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்திடம் கூட ஜனநாயகன் படம் விவகாரம் குறித்து கேட்கப்பட்ட போது நோ கமெண்ட்ஸ் என்று கூறிவிட்டு நகர்ந்தார். இந்த நிலையில் தற்போது நடிகர் மம்முட்டி விரைவில் வெளியாக இருக்கும் தனது பேட்ரியாட் பட புரமோஷன் நிகழ்ச்சிக்காக சென்னை விமான நிலையம் வந்து இறங்கினார். அவரிடம் செய்தியாளர்கள் விஜய்யின் அரசியல் பற்றி கேட்டபோது எனக்கு தெரியாது என்று கூறி புன்னகையுடன் கடந்து சென்று விட்டார்.