ஜோவிகா விஜயகுமார் தெலுங்குப் படத்தின் போஸ்டர் வெளியீடு
ADDED : 11 hours ago
தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக இருக்கும் விஜயகுமார், அவரது மறைந்த மனைவி நடிகை மஞ்சுளா தம்பதியினரின் மகள் வனிதா விஜயகுமார். அவரது மகள் ஜோவிகா தற்போது தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார்.
வனிதா விஜயகுமாரை 'தேவி' என்ற தெலுங்குப் படம் மூலம் அறிமுகம் செய்த பிரபல தயாரிப்பாளர், இயக்குனர் எம்எஸ் ராஜு, வனிதாவின் மகள் ஜோவிகாவையும் 'அகதா' என்ற தெலுங்குப் படம் மூலம் அறிமுகம் செய்கிறார். இப்படத்தில் ஜோவிகாவின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. ஹரிணி என்ற கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார்.
'அகதா' படத்தை எம்எஸ் ராஜு இயக்க சாய் காமாட்சி பாஸ்கர்லா, ஷ்ரவன் ரெட்டி, உல்கா கணேஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள். தெலுங்கில் தயாராகும் இப்படம் தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாக உள்ளது.