சிம்ரன் நடிக்கும் 'டீச்சர்' படத்தின் டைட்டில் டீசர் வீடியோவை வெளியிட்ட விஜய் சேதுபதி!
திருமணத்திற்கு பிறகு அவ்வப்போது சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த சிம்ரன், 'அரண்மனை-4' உள்ளிட்ட சில படங்களில் பாடல் காட்சிகளிலும் நடித்தார். பின்னர் அபிஷன் ஜீவிந்த் இயக்கிய 'டூரிஸ்ட் பேமிலி' படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்தார். அந்த படம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. என்றாலும் அதையடுத்து சிம்ரனின் மார்க்கெட் எதிர்பார்த்தபடி சூடு பிடிக்கவில்லை.
இந்நிலையில் தற்போது சிம்ரன் கதையின் நாயகியாக நடிக்கும் ஒரு புதிய படத்தின் டைட்டில் டீசர் வீடியோவை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். அதில், அப்படத்திற்கு 'டீச்சர்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. 'நீத்தோ' என்ற படத்தை இயக்கிய பாலு ஷர்மா இந்த டீச்சர் படத்தை இயக்குகிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ள இந்த படத்தை ஒயிட்நைட் என்டர்டெயின்மென்ட், சூப்பர் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.