பாண்டிராஜ் இயக்கும் ‛பரிமளா அண்ட் கோ'
ADDED : 5 hours ago
கடந்த 2025 ஜூலை மாதம் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான படம் தலைவன் தலைவி. விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடித்த இந்த படம் 25 கோடியில் தயாரிக்கப்பட்டு 100 கோடி வசூலித்தது. அடுத்தபடியாக பரிமளா அண்ட் கோ என்ற படத்தை இயக்குகிறார் பாண்டிராஜ். இதில் ஜெயராம், ஊர்வசி, யோகி பாபு, மிஷ்கின், சிங்கம் புலி உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் டைட்டில் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. அந்த டீசரில் இந்த படம் ஒரு முழு குடும்ப படம் என்பதோடு, மோகன்லால் நடித்த திரிஷ்யம் பாணியில் ஒரு கொலை சம்பவத்தின் பின்னணியில் கதை நகர்வதும் தெரியவந்துள்ளது. இந்த கதை, திரில்லர் பாணியிலும் நகைச்சுவை கலந்த காட்சிகளாலும் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.