'கர' படத்தின் இரண்டு நாட்கள் வசூல் விவரம்!
ADDED : 12 hours ago
நடிகர் தனுஷ், 'போர் தொழில்' பட இயக்குனர் விக்னேஷ் ராஜா கூட்டணியில் 'கர' படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு திரைக்கு வந்தது. வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படத்திற்கு விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை வந்துள்ளது. இது வசூலிலும் பிரதிபலிக்கிறது.
அதன்படி, கர வெளிவந்த இரண்டு நாட்களில் தமிழகத்தில் சுமாராக ரூ. 11 கோடி அளவிலும், ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் ரூ. 3 கோடி மற்றும் உலகளவில் இப்படம் 2 நாட்களில் ரூ. 20 கோடி வசூலைக் குவித்துள்ளது என்கிறார்கள். இந்த படத்தின் பட்ஜெட் மற்றும் தனுஷ் முந்தைய படங்களின் வசூலை ஒப்பிடும் போது இது மிகவும் குறைவான வசூல் என விநியோக வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.