உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய் பாதியை உண்மையாக்கி விட்டார், மீதிக்கு நான் கடுமையாக உழைக்க வேண்டும் : எஸ்.ஜே. சூர்யா

விஜய் பாதியை உண்மையாக்கி விட்டார், மீதிக்கு நான் கடுமையாக உழைக்க வேண்டும் : எஸ்.ஜே. சூர்யா

நடிகர் விஜய் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் 'தமிழக வெற்றி கழகம்' என்கிற கட்சியைத் தொடங்கி, சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு 108 தொகுதிகளில் வெற்றி பெற்று விரைவில் முதல்வராகப் பொறுப்பேற்க இருக்கிறார். அவருக்குத் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். விஜய்க்கு 'குஷி' என்கிற ஹிட் படத்தை கொடுத்தவரும், 'மெர்சல்', 'வாரிசு' உள்ளிட்ட படங்களில் அவருடன் இணைந்து நடித்தவருமான எஸ்.ஜே. சூர்யாவும் தனது வாழ்த்துக்களை விஜய்க்கு தெரிவித்துள்ளார்.

விஜய்யின் வெற்றி குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துப் பதிவில், வாரிசு திரைப்படத்தின் போது, 'நான் உங்கள் கையால் தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகருக்கான விருதை விரைவில் வாங்குவேன் சார்' என்று கூறியிருந்தேன். நான் சொன்னதில் பாதி இப்போது உண்மையாகிவிட்டது. உங்களிடமிருந்து சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்று மீதியை நிறைவேற்றுவதற்காக நான் இன்னும் கடினமாக உழைக்க வேண்டி இருக்கிறது நண்பா / சார்... உங்களுடைய மிகப்பெரிய வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள்.. நான் இப்போது ரொம்ப குஷியாக இருக்கிறேன்! என்று குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !