வாசகர்கள் கருத்துகள் (1)
தமிழ்நாடு மக்கள் எல்லோரும் பார்த்தாச்சு , வெளிநாடு ல எல்லோரும் பார்த்தாச்சு ..தியேட்டர் ல போய் யாரு பார்ப்பா
தமிழகத்தின் அடுத்த முதல்வர் ஆக விஜய் பதவியேற்பதற்கான சூழல் உருவாகி உள்ளது. ஆட்சி அமைக்க உரிமைக்கோரி ஆளுநரை சந்தித்து கோரிக்கை வைத்துவிட்டார். எனவே, இனி விஜய் திரைப்படங்களில் நடிக்க மாட்டார் என்பது உறுதியாகிவிட்டது.
அவர் நடித்த கடைசி படமான 'ஜனநாயகன்' படம் தணிக்கை தாமதமான காரணத்தால் வெளியீடு தள்ளிப் போய் வருகிறது. விரைவில் அந்த சான்றிதழ் வந்துவிடும் எனத் தெரிகிறது.
இதனிடையே, விஜய்யின் கடைசி படம் என்பதால் இந்தப் படத்தைப் பார்க்கப் பலரும் ஆர்வமாக இருப்பார்கள் என திரையுலகினர் எதிர்பார்ப்பில் உள்ளார்கள். அதனால், இந்தப் படம் வசூல் சாதனை படைக்கவும் வாய்ப்புள்ளது என நம்புகிறார்கள்.
அதனால், 'ஜனநாயகன்' வெளியாகும் போது அதிகமான தியேட்டர்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு மக்கள் எல்லோரும் பார்த்தாச்சு , வெளிநாடு ல எல்லோரும் பார்த்தாச்சு ..தியேட்டர் ல போய் யாரு பார்ப்பா