உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சல்மான்கான் - நயன்தாரா படத்தின் டைட்டில் இதுதானா ?

சல்மான்கான் - நயன்தாரா படத்தின் டைட்டில் இதுதானா ?

கடந்த சில வருடங்களுக்கு முன்பு அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டிலும் அடி எடுத்து வைத்தார் நயன்தாரா. இதனைத் தொடர்ந்து தற்போது இன்னொரு முன்னணி ஹீரோவான சல்மான்கான் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தையும் தென்னிந்திய இயக்குனரான தெலுங்கு திரை உலகத்தைச் சேர்ந்த வம்சி பைடிபள்ளி இயக்கி வருகிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று முடிந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு மணாலியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க அக்ஷய் கண்னா மற்றும் பஹத் பாசில் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகச் சொல்லப்பட்டு வருகிறது. அரவிந்த்சாமியிடமும் பேசி வருகின்றனர். இந்த நிலையில் ஸ்பை திரில்லராக உருவாகி வரும் இந்தப் படத்திற்கு 'தி மெசஞ்சர்ஸ்' என டைட்டில் வைக்கப்பட்டு இருப்பதாக ஒரு தகவல் கசிந்துள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !