உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கிரிக்கெட் வீரர் பயோபிக்கில் மீண்டும் இணையும் 'லகான்' கூட்டணி

கிரிக்கெட் வீரர் பயோபிக்கில் மீண்டும் இணையும் 'லகான்' கூட்டணி

அஷுதோஷ் கவுரிக்கர் இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில், அமீர்கான், கிரேஸி சிங் மற்றும் பலர் நடிப்பில் 2001ல் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'லகான்'. 1893ம் ஆண்டு நடப்பதாக கதை கொண்ட ஒரு பீரியட் திரைப்படமாக வெளிவந்தது. ஹிந்தித் திரையுலகத்தில் அதிகம் பேசப்படும் படங்களில் ஒன்றாக அமைந்தது.

25 வருடங்களுக்குப் பிறகு இயக்குனர் அஷுதோஸ், அமீர்கான் மீண்டும் இணையப் போவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. 1983ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் ஆல் ரவுண்டராக இருந்தவர் மொகிந்தர் அமர்நாத். அவரது தந்தை லாலா அமர்நாத் பற்றிய பயோபிக் படத்தைத்தான் இந்தக் கூட்டணி மீண்டும் எடுக்கப் போகிறது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் முதன் முதலில் சதமடித்த இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றவர் லாலா அமர்நாத். 1933ம் ஆண்டு பம்பாயில் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரரான களமிறங்கிய லாலா அமர்நாத் சதமடித்தார்.

இந்த ஆண்டு இறுதிக்குள் இப்படம் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !