முதல்வராக பொறுப்பேற்ற விஜய்; விழாவில் பங்கேற்ற திரைப்பிரபலங்கள்
தமிழகத்தின் புதிய முதல்வராக நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் இன்று (மே 10) பொறுப்பேற்றுக்கொண்டார். இவ்விழாவில் அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் பலரும் பங்கேற்றனர். அத்துடன் விஜயின் பெற்றோர் இயக்குனர் சந்திரசேகர், ஷோபா ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும், சினிமா பிரபலங்கள் சிலரும் கலந்து கொண்டு விஜய் பதவியேற்பு விழாவை சிறப்பித்தனர். நடிகர் ஜெய், நடிகைகள் திரிஷா, சங்கீதா, பாடகர் கிரிஷ், 'ஜனநாயகன்' திரைப்படத்தின் தயாரிப்பாளரான வெங்கட் நாராயாணா, 'தி கோட்' பட தயாரிப்பாளர் அர்ச்சனா, 'லியோ' தயாரிப்பாளர் லலித், நடிகர் மன்சூர் அலிகான், பாடலாசிரியர் விவேக், விஜய்யின் நெருங்கிய நண்பரும் சின்னத்திரை நடிகருமான சஞ்சய், அவரது மனைவி ப்ரீத்தி சீனிவாசன், நடிகர் ஸ்ரீமன் ஆகியோரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். மேலும், தூத்துக்குடி எம்எல்ஏவும் விஜய்யின் நண்பரும் ஸ்ரீநாத்தும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
நீல நிற புடவையில் வந்திருந்த நடிகை திரிஷா, பதவியேற்பு விழாவிற்கு வந்ததும் முதலில் விஜய்யின் தாயார் ஷோபாவை ஆரத்தழுவி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். மேலும், அவர் கூட்டத்தினரையும் நோக்கி கை அசைத்தார்.