'ஜனநாயகன்' பட ஓடிடி உரிமையை கைப்பற்ற போட்டி போடும் நிறுவனங்கள்!
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கடைசி படம் ஜனநாயகன். இந்த படம் கடந்த ஜனவரியில் பொங்கல் தினத்தில் திரைக்கு வர இருந்தது. ஆனால் சென்சார் சான்றிதழ் பிரச்னை காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போனது. அதையடுத்து தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தலுக்கு பிறகு தான் படத்தை வெளியிட முடியும் என்று சொல்லி கிடப்பில் போட்டு விட்டார்கள். இதன் காரணமாக ஜனநாயகன் படத்தின் ஓடிடி உரிமையை வாங்கி இருந்த அமேசான் நிறுவனம் அதை ரத்து செய்தது.
இந்நிலையில் தற்போது தேர்தலில் வெற்றி பெற்று விஜய் முதல்வராகியுள்ள நிலையில் அப்படத்தை வெளியிடுவதற்கு படக்குழு தயாராகி வருகிறது. அதோடு விஜய் முதல்வர் ஆகிவிட்டதால் முதல்வர் விஜய் நடிக்கும் 'ஜனநாயகன்' என்ற போஸ்டர்களும் தற்போது தயாராகி வருவதோடு ஜூன் மாதம் படத்தை வெளியிடும் வேலைகள் தொடங்கி இருக்கிறது. இந்நிலையில் தற்போது ஜனநாயகன் படத்தின் ஓடிடி உரிமையை வாங்குவதற்கு ஏற்கனவே ரத்து செய்த அமேசான் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் உள்ளிட்ட சில நிறுவனங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்கள்.