ஜூன் 12ல் நெட்பிளிக்ஸ் வெளியாகும் சூர்யாவின் கருப்பு!
ADDED : 6 hours ago
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து திரைக்கு வந்துள்ள படம் ‛கருப்பு'. அடுத்தடுத்து சூர்யா நடித்த படங்கள் தோல்வியை தழுவி வந்த நிலையில் இந்த படம் அவருக்கு சூப்பர் ஹிட்டாக அமைந்திருக்கிறது. சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ள இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசை அமைத்திருக்கிறார். மேலும், கருப்பசாமி வழிபாடு மற்றும் சமூக நீதி, சட்ட அமைப்பின் குறைபாடுகள் குறித்த கதையில் உருவாகி இருக்கும் இந்த படம் இதுவரை உலக அளவில் 200 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.
இந்த நிலையில் தற்போது இந்த கருப்பு படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அதில், வருகிற ஜூன் 12ம் தேதி இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.