அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு
ADDED : 23 days ago
வெற்றிமாறன் இயக்கிய 'வட சென்னை' படத்தின் தொடர்ச்சியாக அவர் தற்போது இயக்கி வரும் படம் 'அரசன்'. இதில் சிம்பு, விஜய்சேதுபதி, சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, நெல்சன் திலீப்குமார், விக்ராந்த், யோகி பாபு, மற்றும் கமலேஷ் ஜெகன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
சென்னையைச் சேர்ந்த கேங்ஸ்டர் மயிலை சிவகுமாரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட கதை என்று கூறப்படுகிறது. அனிருத் இசை அமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். வி.கிரியேஷன் சார்பில் எஸ்.தாணு தயாரிக்கிறார்.
தற்போது இதன் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகிறது. இதன் படப்பிடிப்புகள் கடந்த 2 மாதமாக இரவில் மட்டும் நடந்து வருகிறது. இன்னும் இதன் படப்பிடிப்புகள் தொடர்ச்சியாக இரவிலேயே படமாக்கப்பட இருக்கிறது. படத்தின் அடுத்த ஷெட்யூல் படப்பிடிப்புகள் பகல் காட்சிகளாக படமாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.