உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நமது அடையாளத்தில் உறுதியாக இருந்தால் அங்கீகாரம் நிச்சயம்: 'ஹிப்ஹாப்' ஆதி

நமது அடையாளத்தில் உறுதியாக இருந்தால் அங்கீகாரம் நிச்சயம்: 'ஹிப்ஹாப்' ஆதி


'ஹிப்ஹாப் தமிழா' என்ற பெயரில் இசைக்குழுவை ஆரம்பித்து, பல பாடல்களையும் பாடி, இசையமைத்து வெளியிட்டவர் ஆதி. பின்னாளில் 'ஹிப்ஹாப்' என்பதே இவரின் அடையாளமானது. ஆங்கில ராப் பாடல்களை போன்று, தமிழிலும் ராப் பாடல்களை கொண்டு செல்ல முடியும் என நிரூபித்து காட்டினார். ஜல்லிக்கட்டு பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 'டக்கர் டக்கர்' பாடல் பலரிடம் போய் சேர்ந்தது.

இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், கல்லூரி நாட்கள் முதல் பல நினைவுகளை பகிர்ந்தார். அவர் பேசியதாவது: கல்லூரியில் இருந்தபோது நான் என் அடையாளத்தை மறைக்கத் தொடங்கினேன். எப்போதும் முகமூடியும் 'பீனி' (beanie) தொப்பியும் அணிந்திருப்பேன். எனது ஆரம்பகால இசை வீடியோக்களில் என் கழுத்தைச் சுற்றி ஒரு ஸ்கார்ப் இருப்பதை நீங்கள் பார்க்கலாம். என் பெற்றோருக்குக் கூட இது தெரியாது.

யாரும் என்னுடன் அவ்வளவு எளிதில் ஒன்றிப்போயிருக்க மாட்டார்கள். எனது உணர்வுகளை எனது தாய்மொழியான தமிழில் வார்த்தைகளாக வெளிப்படுத்துவதே சிறந்தது. நீங்கள் எவ்வளவு அதிகமாக உங்கள் உள்ளூர் அடையாளத்துடன் இருக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக உலகளாவிய அளவில் அங்கீகரிக்கப்படுவீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நீங்கள் எதைச் செய்தாலும் அதில் மிகுந்த பெருமிதம் கொள்ளுங்கள்.

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு குறித்துப் பல தவறான புரிதல்கள் இருந்தன. இது வெறும் விளையாட்டு மட்டுமல்ல, மாறாக விவசாயிகள் மற்றும் கலாசாரத்தோடு பிணைந்த ஒரு முழுமையான வாழ்வியல் சூழல் என்பதை விளக்கிய மக்களை நாங்கள் சந்தித்தோம். அந்தப் பார்வையை இப்பாடலில் கொண்டுவர முயன்றோம். 'ஹிப்ஹாப் தமிழா' வெறும் ஒரு வணிக முத்திரை (பிராண்ட்) அல்ல, 'ஹிப்ஹாப் தமிழா என்பது ஒரு இயக்கம்'. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !