சூர்யா படத்தில் பின்னணி பாடுகிறாரா மமிதா பைஜு?
கருப்பு படத்தை அடுத்து வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இதில் அவருக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடித்திருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரைக்கு வருகிறது. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் முதல் பாடல் ஜூன் 17ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது சம்பந்தமாக பிரமோ வீடியோ ஒன்றை ஜி.வி. பிரகாஷ் குமார் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
அதில், இந்த படத்தின் முதல் பாடலை பாடுவதற்கு ஒரு சிங்கரை தான் அனுப்பி வைப்பதாக போனில் கூறுகிறார் இயக்குனர் வெங்கி அட்லூரி. அதையடுத்து தனது ஸ்டுடியோவின் ஹாலிங் பெல் அடித்ததை அடுத்து அந்த சிங்கர் யாராக இருக்கும் என்று பார்க்க செல்கிறார் ஜி.வி. பிரகாஷ். ஆனால் அங்கே இப்படத்தின் நாயகியாக மமிதா பைஜூ நின்று கொண்டிருக்கிறார். அவரைப் பார்த்ததும் இன்ப அதிர்ச்சியடையும் அவர், இந்த பாடலை மமிதா பாடினால் வைரல் ஆகிடுமே என்று அவரிடத்தில் ரிகர்சல் பார்த்து விட்டீர்களா என்று கேட்கிறார். அதற்கு பார்த்து விட்டதாக அவர் கூறுகிறார்.
அப்போது தனது கீ போர்டில் ஜி.வி.பிரகாஷ் கார்டு பிடித்ததும் பாடாமல் அதற்கு ஏற்ப நடனமாட தொடங்குகிறார் மமிதா பைஜூ . அதை பார்த்து பாட வந்ததாக அவர் சொன்னார். நீ டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கிறாயே என்று கேட்கிறார் ஜி.வி., அதற்கு மமிதா பைஜூ, நான் நடனமாடத்தான் வந்தேன் என்று கூறுகிறார். உங்கள் ஸ்டுடியோ நன்றாக இருப்பதாக கேள்விப்பட்டேன். அதனால் தான் நம்முடைய பாட்டுக்கு ஒரு ரீல்ஸ் போடலாம் என்று வந்தேன் என்கிறார்.
அதற்கு, அப்படின்னா பாட்டு பாடலியா? என்று ஜி.வி கேட்க, சார் அது உங்க டிபார்ட்மெண்ட். டான்ஸ் என் டிபார்ட்மெண்ட். அதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று மமிதா பைஜூ கூறுகிறார். அதையடுத்து ஜி.வி.பிரகாஷ் அந்த பாடலை கீ போர்டில் வாசிக்க தொடங்க, அதற்கு ஏற்ப நடனமாட தயாராகிறார் மமிதா பைஜூ. இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் புரமோ ஜூன் 17 ந்தேதி வெளியாவதாக அந்த வீடியோவில் அறிவித்துள்ளார்கள்.