உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விக்ரமுக்கு வில்லனாக நடிக்கும் திலகனின் மகன்

30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விக்ரமுக்கு வில்லனாக நடிக்கும் திலகனின் மகன்


'இருமுகன்' பட இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் தற்போது அவரது 63வது படத்திற்காக இணைந்து நடித்து வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. ஆக்சன் திரில்லராக உருவாகும் இந்த படத்தில் வில்லனாக நடிப்பதற்காக இணைந்துள்ளார் பிரபல மலையாள வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகரான ஷம்மி திலகன். 'சத்ரியன், மேட்டுக்குடி' உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமான மறைந்த நடிகர் திலகனின் மகன் தான் இவர்.

ஏற்கனவே விஜய் நடித்த 'ஜில்லா' படத்தில் மோகன்லாலுக்கு வில்லனாக நடித்த இவர், பல வருடங்கள் கழித்து மீண்டும் தமிழில் நடிக்கிறார். அது மட்டுமல்ல, நடிகர் விக்ரம் 90களில் தனது ஆரம்ப காலகட்டத்தில் மலையாள சினிமாவில் நடித்து வந்தபோது அவருடன் 'துருவம்' மற்றும் 'ஸ்ட்ரீட்' ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளார் ஷம்மி திலகன். அந்த வகையில் முப்பது ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விக்ரமுடன், அதுவும் தமிழில் இணைந்து நடிக்கிறார் ஷம்மி திலகன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !