உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தீபாவளி ரேஸில் ரஜினி, சிம்பு படங்கள்

தீபாவளி ரேஸில் ரஜினி, சிம்பு படங்கள்

வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்து வரும் படம் 'அரசன்' . இந்த படத்தை தொடங்கிய கால கட்டத்தில் இருந்தே இத்திரைப்படத்தை இவ்வருட தீபாவளி பண்டிகையொட்டி திரைக்கு கொண்டு வருகின்ற திட்டத்தில் தான் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் 'ஜெயிலர் 2' படத்தை செப்டம்பர் 4ம் தேதியன்று திரைக்கு கொண்டு வரும் திட்டத்தில் தான் பணிகளை மேற்கொண்டு வந்தனர். ஆனால், எதிர்பாராத விதமாக ஜெயிலர் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட தாமதத்தால் ஜெயிலர் 2 படத்தை தீபாவளிக்கு வெளியிடலாமா என திட்டமிட்டு வருகின்றனராம்.

இதனால் ரஜினி, சிம்பு படங்கள் நேரடியாக மோதும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதில் மாற்றம் வருமா என்பது போக போக தெரியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

KayD, Mississauga
2026-06-18 20:32:36

ஏற்கனவே ஒருத்தர் மேல தமிழ்நாடே வெறியா இருக்காங்க , அது ஜெயிலர் ஆ failure ஆ இல்லை பத்து தலையா இல்லை வெத்து வேட்டா தெரிய ரொம்ப நாள் இல்லை. ரெண்டு பேருக்கும் வாழ்த்துக்கள் படம் வெற்றியடைய