முதல் நாளில் 13 கோடி வசூலித்த சமந்தாவின் 'மா இன்ட்டி பங்காரம்'
நந்தினி ரெட்டி இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், சமந்தா, குல்ஷன் தேவய்யா, ஸ்ரீமுகி, கவுதமி, ஆனந்த் மற்றும் பலர் நடிப்பில் நேற்று வெளியான தெலுங்குத் திரைப்படம் 'மா இன்ட்டி பங்காரம்'.
சமந்தா முதன்மைக் கதாபாத்திரத்தில் ஆக்ஷன் ஹீரோயினாக நடித்துள்ள இப்படத்தின் மீது வெளியீட்டிற்கு முன்பே எதிர்பார்ப்பு எழுந்தது. அது படம் வெளிவந்த பின்பு மீண்டும் அதிகமாகி உள்ளது. படத்திற்கான விமர்சனங்களும் பாசிட்டிவ்வாக வந்து, ரசிகர்களும் படத்தை வரவேற்றுள்ளனர்.
அதனால், படத்தின் முதல் நாள் வசூலாக உலக அளவில் 13.15 கோடி ரூபாய் பெற்றிருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சமந்தா கடைசியாக கதாநாயகியாக நடித்த 'குஷி' படம் வெளிவந்து சுமார் மூன்று வருடங்களாகிவிட்டது. இத்தனை வருட இடைவெளிக்குப் பிறகும் அவருக்குரிய வரவேற்பு குறையாமல் இருப்பதாக தெலுங்குத் திரையுலகினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இப்படம் குறிப்பிடும்படியான வசூலைப் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.