மகளுக்கு கடிவாளம் போட்ட தந்தை
ADDED : 8 hours ago
மறைந்த அந்த பிரபல நடிகையின் வாரிசு நடிகை, பாலிவுட்டில் இருந்து, தெலுங்கு சினிமாவுக்கு வந்துள்ள நிலையில், படுகவர்ச்சியாக நடித்து வருகிறார். இதனால், அவருக்கான, தெலுங்கு சினிமா ரசிகர்கள் பெருகியுள்ளனர். அதுமட்டுமல்லாமல், தெலுங்கு முன்னணி நடிகர்கள் பங்கேற்கும், 'பார்ட்டி'களிலும், 'டூ-பீஸ்' உடையில் களமிறங்கி, செம குத்தாட்டம் போடுகிறார்.
இந்த விவகாரம், அம்மணியின் தந்தை குலத்தின் காதுகளை எட்டியதை தொடர்ந்து, மகளின் இந்த அத்துமீறல் ஆட்டத்துக்கு அதிரடியாக தடை போட்டுள்ளார். 'இப்படி எல்லாம் ஆட்டம் போட்டு, உன் அம்மாவின் பெயரை கெடுத்து விடாதே...' என்று மகளுக்கு கடிவாளம் போட்டு வருகிறார்.