உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛தர்மன்' : ரஜினிகாந்த் 173 படத்தின் அதிகாரப்பூர்வ ஆரம்பம்

‛தர்மன்' : ரஜினிகாந்த் 173 படத்தின் அதிகாரப்பூர்வ ஆரம்பம்

நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், ரஜினிகாந்த் நடிக்கும் 173வது படம் அதிகாரப்பூர்வமாக ஆரம்பமாகிறது.

இப்படத்தை முதலில் சுந்தர் சி இயக்குவதாக அறிவித்தார்கள். ஒரே வாரத்தில் அவர் இந்தப் படத்திலிருந்து விலகினார். அதற்கடுத்து சிபி சக்கரவர்த்தி இப்படத்தை இயக்குவார் என்றார்கள். ஆனால், அதுவும் நடக்கவில்லை.

தற்போது 'டிராகன்' படத்தின் இயக்குனரான அஷ்வத் மாரிமுத்து இப்படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ ஆரம்பம் இன்று சிறிய விழாவுடன் ஆரம்பமானது. படத்திற்கு ‛தர்மன்' என பெயரிட்டுள்ளனர்.

இப்படத்தில் நடிக்கும் சிம்ரன், ராஷி கண்ணா, மற்றும் சினிமா பிரபலங்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கான போட்டோ ஷுட் ஏற்கெனவே நடந்து முடிந்துள்ளது. இதர கலைஞர்கள், நடிகர்கள் அறிவிப்புகள் வெளியாக உள்ளது. நாளை முதல் படப்பிடிப்பு துவங்குகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !