உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஒரு காட்சிக்காக 90 டேக்குகள் எடுத்த ராஜமவுலி : பிரமிக்கும் பிரித்விராஜ்

ஒரு காட்சிக்காக 90 டேக்குகள் எடுத்த ராஜமவுலி : பிரமிக்கும் பிரித்விராஜ்

தெலுங்கில் இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா மற்றும் நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் வாரணாசி திரைப்படம் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இதில் பிரித்விராஜ் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படப்பிடிப்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றைப் பற்றி சமீபத்தில் குறிப்பிட்டுள்ள பிரித்விராஜ், இயக்குனர் ராஜமவுலி எந்த அளவிற்குத் துல்லியமான கலை நயம் கொண்டவர் என்பது குறித்துத் தனது பிரமிப்பை வெளிப்படுத்தியுள்ளார்..

இது குறித்து அவர் கூறும்போது, வாரணாசி பின்னணியில் ஒரு முக்கியமான காட்சியின் படப்பிடிப்பு நடைபெற்றபோது, அந்த காட்சியை மட்டும் சரியாகக் கொண்டு வருவதற்காக சுமார் 90 முறை ரீடேக் எடுக்க வேண்டியிருந்தது. காட்சி முழுமை பெறுவதற்கு அவர் எவ்வளவு பொறுமையுடனும் நுணுக்கமாகவும் செயல்படுகிறார் என்பதை அவரிடம் பணிபுரியும் போதுதான் உணர முடிகிறது என்று கூறியுள்ளார்.

ஒரு நடிகராகத் தனது எல்லைகளைத் தாண்டிச் சிந்திக்கவும், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளவும் ராஜமவுலியின் இயக்கும் முறை தனக்கு ஊக்கம் அளிப்பதாகவும் பிரித்விராஜ் கூறியுள்ளார்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !