பத்மபூஷன் விருது பெற்ற மம்முட்டி : ஓம் படப்பிடிப்பில் கேக் வெட்டி கொண்டாட்டம்
நடிகர் தனுஷ் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தற்போது ஓம் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில், ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு நடிப்பதன் மூலம் தமிழுக்கு திரும்பியுள்ளார் நடிகர் மம்முட்டி.
சமீபத்தில் நடிகர் மம்முட்டிக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. இந்த நிலையில், ஓம் படப்பிடிப்பில் கலந்து கொண்ட மம்முட்டியை வரவேற்ற தனுஷ், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி மற்றும் படக்குழுவினர் மலர்க்கொத்து கொடுத்து தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். மேலும், படப்பிடிப்பு தளத்தில் மிகப் பெரிய கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இப்படத்தில் மம்முட்டி 'கார்த்திகேயன்' என்ற மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஏற்கனவே இப்படத்தின் தலைப்பு மற்றும் டீசர் வெளியான நிலையில், மம்முட்டியின் கதாபாத்திரம் குறித்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.