உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஓடிடியிலும் வரவேற்பை பெற்ற பிளாஸ்ட்

ஓடிடியிலும் வரவேற்பை பெற்ற பிளாஸ்ட்

சுபாஷ் கே.ராஜ் இயக்கத்தில் அர்ஜுன் நாயகனாக நடித்து கடந்த மே மாதம் 28 ஆம் தேதி திரைக்கு வந்த படம் பிளாஸ்ட். அர்ஜுனுடன் அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்க, ரவி பஸ்ரூர் என்பவர் இசையமைத்துள்ளார். ஆக் ஷன் கதையில் உருவான இந்த படத்திற்கு தியேட்டரில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று 75 கோடிக்கு மேல் வசூலித்திருக்கிறது. நேற்று நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் படம் வெளியிடப்பட்டது. வெளியான முதல் நாளிலேயே நெட் பிளிக்ஸ் இந்தியாவின் தரவரிசையில் இப்படம் முதலிடத்தை பிடித்துள்ளது. தமிழ் மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழிகளிலும் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருவதாக தகவல் வெளியிட்டுள்ளார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !