'பா' வரிசை இயக்குனர்களை இழந்துவிட்ட தமிழ் சினிமா
தமிழ் சினிமாவில் 70, 80களில் கோலோச்சிய முக்கியமான இயக்குனர்கள் மறைந்து போனதுத மிழ் சினிமாவிற்கு பேரிழப்பாக அமைந்துவிட்டது.
அந்தக் காலங்களில் 'பா' வரிசை இயக்குனர்கள் என சில இயக்குனர்கள் அவர்களது படங்களால் கொண்டாடப்பட்டு ரசிக்கப்பட்டனர். பாலசந்தர், பாலு மகேந்திரா, பாரதிராஜா, பாக்யராஜ் என அவரவர் தனித் திறமையால் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்கள் மறைந்து போய்விட்டனர்.
அதிலும் ஒரு மாதத்திற்குள்ளாக பாரதிராஜா, பாக்யராஜ் என குரு, சிஷ்யன் இருவரின் மறைவும் திரையுலகினரை மட்டுமல்ல, ரசிகர்களையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது.
பா வரிசை இயக்குனர்களில் மற்றவர்கள் இயக்கத்துடன் நின்றிருக்க, பாக்யராஜ் மட்டும்தான் இயக்கம், நடிப்பு, இசை என பன்முகக் கலைஞனாக இருந்தார். அவரது திரைக்கதை என்பது இந்திய அளவில் பேசப்பட்டது. பாரதிராஜா பிற்காலத்தில்தான் நடிப்பு பக்கம் வந்தார்.
பாக்யராஜ் சமீபத்தில் கூட சில படங்களில் நடித்து வந்தார். அப்பா, அண்ணன் கதாபாத்திரங்களிலும் தனது நடிப்பால் பேச வைத்தார். தமிழ் சினிமாவில் ஏற்பட்டுள்ள இந்த இழப்புகளை சரி செய்வதற்கு இன்னும் எத்தனை ஆண்டு காலம் ஆகுமோ என்ற ஏக்கம் பலருக்கும் உள்ளது.