லோகேஷ் கனகராஜின் ‛டிசி', ஜூலை 31ல் ரிலீஸ்
ரஜினியின் ‛கூலி' படத்திற்கு பிறகு தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார் லோகேஷ் கனகராஜ். அதற்கு முன்னதாக அவர் ஹீரோவாக களமிறங்கி இருக்கும் படம் ‛டிசி'. நாயகியாக வாமிகா கபி நடித்துள்ளார். அருண் மாதேஸ்வரன் இயக்கி உள்ளார். அதிரடி ஆக் ஷன் படமாக அதில் ஒரு மெல்லிய காதலும் இடம்பெறும் வகையில் இந்த படம் உருவாகி வருகிறது.
சில மாதங்களுக்கு முன் படப்பிடிப்பு முடிந்தது. ஏற்கனவே படத்தின் டீசரும் வெளியாகி இருந்தது. டீசர் முழுக்கவே ரத்தம் தெறிக்கும் காட்சிகளும் இடம் பெற்று இருந்தன. படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகள் நடந்து வந்த சூழலில் தற்போது படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதன்படி இம்மாதம் ஜூலை 31ம் தேதி ‛டிசி' படம் வெளியாக உள்ளது.
இயக்குனராக வெற்றி பெற்ற லோகேஷ், ஹீரோவாக வெற்றி பெறுவாரா என ஜூலை 31க்கு பின் தெரிந்துவிடும்.