உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / புதுமுகங்களின் 'ஸ்கார்'

புதுமுகங்களின் 'ஸ்கார்'


'கிறிஸ்டினா கதிர் வேலன்' படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த அலெக்ஸ் பாண்டியன், அடுத்து இயக்கும் படம் 'ஸ்கார்' ஸ்ரீ லக்ஷ்மி ட்ரீம் பேக்டரி சார்பில் ஆர்.பிரபாகர் ஸ்தபதி மற்றும் ஜி மீடியா பிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கின்றனர்.

படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதற்கான நடிகர் தேர்வு தற்போது சென்னை கோவை, திருச்சி மற்றும் மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்புகள் ஊட்டி, கேரளா வயநாடு, பெங்களூரு மற்றும் கனடா போன்ற பல்வேறு இடங்களில் படப்பிடிப்புகள் நடைபெற உள்ளன.

ஸ்கார் என்றால் தழும்பு என்று பொருள். ஒவ்வொரு மனிதர்களுக்கும் கண்டிப்பாக ஒரு தழும்பு இருக்கும் அது என்றும் மறையாது, தனக்கு ஏற்பட்ட ஒரு தழும்பை மறைக்க நாயகன் எடுக்கும் முயற்சிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாகிறது. முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கிறார்கள். படமும் புதிய அனுபவத்தை தரும் என்றார் இயக்குனர் அலெக்ஸ் பாண்டியன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !