உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கிரீடம் சூட்ட காரணமான பலர் இன்று உயிருடன் இல்லை ; மோகன்லால் உருக்கம்

கிரீடம் சூட்ட காரணமான பலர் இன்று உயிருடன் இல்லை ; மோகன்லால் உருக்கம்


மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 1989ல் வெளியான படம் 'கிரீடம்'. இயக்குனர் சிபி மலயில் இயக்கத்தில், லோகிததாஸ் கதையில் உருவான இந்தப் படம் ஒரு கல்ட் கிளாசிக் படமாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தற்போது 37 ஆண்டுகள் கழித்து, இப்படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மெருகேற்றப்பட்டு, வரும் ஜூலை 10ம் தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இதன் பிரீமியர் காட்சியில் கலந்துகொண்ட மோகன்லால், நிகழ்வில் பேசுகையில், இதுபோன்ற ஒரு படத்தை மீண்டும் உருவாக்க, அப்போது இணைந்து பணியாற்றிய பல அற்புதமான கலைஞர்கள் இன்று நம்மிடையே இல்லை என்று உருக்கமாகப் பேசினார். அவர் குறிப்பிட்டது போல, இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த திலகன், கொச்சின் ஹனீபா, முரளி, கவியூர் பொன்னம்மா, மாமுகோயா, ஒடுவில் உன்னிகிருஷ்ணன், வில்லனாக நடித்த மோகன்ராஜ் மற்றும் படத்தின் கதாசிரியரான லோகிததாஸ் உள்ளிட்ட பலர் தற்போது உயிருடன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !