உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கல்யாணி பிரியதர்ஷனை வரவேற்ற விம்பிள்டன்

கல்யாணி பிரியதர்ஷனை வரவேற்ற விம்பிள்டன்


டென்னிஸ் போட்டிகளின் மிகப் பழமையான போட்டியான விம்பிள்டன் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அந்த போட்டிகளை இந்திய சினிமா பிரபலங்கள், விளையாட்டு பிரபலங்கள் பலரும் நேரில் சென்று பார்த்து ரசிப்பது வழக்கம்.

தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து வரும் நடிகையான கல்யாணி பிரியதர்ஷன் தற்போது நடைபெற்று வரும் விம்பிள்டன் போட்டிகளைப் பார்த்து ரசிக்க அங்கு சென்றள்ளார். அவரை வரவேற்று விம்பிள்டன் அவர்களது இன்ஸ்டா தளத்தில் பதிவிட்டுள்ளது. விம்பிள்டன் கோப்பையை கையில் ஏந்தியும், சென்டர் கோர்ட் உள்ளிட்ட இடங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்கள்.

300 கோடிக்கும் அதிகமாக வசூலித்த மலையாளப் படமான 'லோகா' படம் மூலம் உலக அளவில் பிரபலமான கல்யாணி தற்போது விம்பிள்டன் வரவேற்கும் அளவிற்கு பெருமை அடைந்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !